×

பெயின்ட் கம்பெனியில் இருந்து நஷ்டஈடு, மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு

காஞ்சிபுரம்: பெயின்ட் கம்பெனியில் பெயின்ட் அடிக்கும் பணியின்போது தவறி விழுந்து தண்டுவடம் உடைந்த வாலிபர், நஷ்ட ஈடும், மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தி மனு அளித்துள்ளார். மானாமதி வீசூர் தென்காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா மானாமதி வீசூர் தென்காலனி பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (28). இவர் கானத்தூர் ஊத்தன்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் பெயின்ட் கம்பெனியில், பெயின்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு பெயின்ட் வேலை செய்து கொண்டிருக்கும்போது, தவறி விழுந்ததில் என்னுடைய முதுகு தண்டு உடைந்து அடிப்பட்டது.

பின்னர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றபோது, எனக்கு தவறுதலாக நரம்பு அறுவை சிகிச்சை செய்து விட்டனர். நான் அன்று முதல் இன்று வரை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன். மேலும், எனக்கு வயதான அம்மா, அப்பா உள்ளனர். இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். எனக்கு அந்த கம்பெனியில் எந்த நஷ்டஈடும் வழங்கவில்லை என்னை பராமரித்து கொள்ளவும், எனக்கு மருத்துவ உதவி செய்யும் எனக்கு யாரும் முன்வரவில்லை. வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறேன். மருத்துவ வசதியும் எனது கம்பெனியிலிருந்து எனக்கு நஷ்ட ஈடும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எனக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post பெயின்ட் கம்பெனியில் இருந்து நஷ்டஈடு, மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு appeared first on Dinakaran.

Tags : Paint Company ,Office of the Collector ,Kanchipuram ,Company ,Volleber ,Collector's Office ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...